திருமணமானது தெரிந்தும் உறவை முறித்த பெண் தோழி தற்கொலை..!
திருமணமானது தெரிந்ததும் உறவை முறித்த பெண் தோழிக்காக ஒரு நபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த திருமணமான 32 வயது நபர் ஒருவர் வேறு ஒரு பெண் ஒருவருடன் இருந்துள்ளார்.
இந்த நிலையில் அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை இருப்பதை அறிந்த அந்த பெண் உறவை தொடர மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த அந்த நபர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. புதன்கிழமை அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
தற்கொலை கடிதம் மற்றும் பூச்சி மருந்து பாட்டில் ஒன்று மீட்கப்பட்டதாக துணை காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார். அந்த நபரின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





