முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது..!
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. 2023-2024 ஆம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை அமைச்சரவையில் ஒப்புதல் தரப்படுகிறது.
தொழில் துறை சார்பில் பல்வேறு புதிய தொழில் நிறுவனங்களுக்கும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளன. மகளிருக்கு ரூ.1,000 உரிமை தொகை வழங்குவது உள்ளிட்ட புதிய திட்டங்களுக்கு அமைச்சரவையில் ஒப்புதல் தரப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.





