கேரளாவில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து.. குழந்தையை தூக்கிக் கொண்டு ஓடிய தந்தை..!
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் அதிவேகமாக சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து திடீர் என்று கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த கட்டிடங்கள் மீது மோதியது. அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் சுதாரித்துக் கொண்டதால் உயிர் பிழைத்தனர்.
அங்கு நின்ற தந்தை ஒருவர் தன் குழந்தையை தூக்கிக் கொண்டு ஓடியதால் உயிர் பிழைத்தார். எனினும் இந்த விபத்தில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.





