--- --:--:-- --

தாலி கட்டும் நேரத்தில் திருமணமே வேண்டாம் என நிறுத்திய மணமகள்..!

5

ராமநாதபுரம் அருகே திருமணம் நடைபெற இருந்த கடைசி நிமிடத்தில் திருமணமே வேண்டாம் என மணமகள் மறுத்தது அங்கிருந்தோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆதிய குடியை சேர்ந்த கணினி பட்டதாரி சரவணனுக்கும், விஷ்ணு பிரியாவுக்கும் கோயிலில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

மணக்கோளத்தில் வந்த மாப்பிள்ளையும் பெண்ணும் கோயில் பதிவேட்டில் கையெழுத்திட்டு மணவறையில் அமர்ந்திருந்தனர். சரவணன் தாலி கட்டும் அந்த தருணத்தில் விஷ்ணுபிரியா திடீரென முகமாறி, மனது மாறி மங்கள மாலை அணிவிக்க விடாமல் தடுத்தார்.

 

பெற்றோர்கள் சமாதானப்படுத்தியும் முயற்சிகளில் பலன் இல்லை. ஏமாற்றம் அடைந்த மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாருடன் வாக்குவாதம் செய்தனர். தகவல் அறிந்து சென்று திருவாடானை காவல்துறையினர் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினார்.

 

Right Menu Icon