--- --:--:-- --

மார்ச் இல் 3வது அலை முடிவுக்கு வருமாம்..!

9

மார்ச் மாதத்தில் கொரொனா வைரஸ் பெருந்தொற்றின் மூன்றாவது அலை முடிவுக்கு வரும் என குடும்ப நலத்துறை அமைச்சர் ராஜேஷ் தெரிவித்துள்ளார். மராட்டியத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மூன்றாவது அலையில் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 40 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர்.

 

இருப்பினும் மூன்றாவது அலையின் போது மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் இறப்பு விகிதம் குறைவாகவே இருந்தது. மேலும் சில நாட்களாக நோய் தொற்று பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது. தற்போது தினசரி 15 ஆயிரமாக குறைந்துள்ளது.

 

குறிப்பாக முக்கிய நகரங்களான பூனே, தானே மற்றும் ராய்கட் போன்ற இடங்களில் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. இது குறித்து பேசிய அமைச்சர் ராஜேஷ் நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை மாநிலம் முழுவதும் குறைய தொடங்கியுள்ளது.

 

எனவே கடந்த மார்ச் மாதம் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் முழுமையாகக் குறையும் என குறிப்பிட்டுள்ளார்.

 

Right Menu Icon