--- --:--:-- --

நெல்லை சர்ச் அருகே பயங்கர சப்தம்..!

8

திருநெல்வேலி டவுன் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் வீசிய மர்ம பொருள் வெடித்ததில் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சிஎஸ்ஐ கிறிஸ்து ஆலயம் அருகே காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் வீசிய மர்ம பொருள் பயங்கர சப்தத்துடன் பிடித்துள்ளது.

 

பின்னர் அந்த வழியாக சென்ற ஐயப்ப பக்தர்கள் ஆகியோரை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் அந்த நபர்கள் விரட்டி சென்றதாக தெரிகிறது. அங்கிருந்த தப்பிய இருவரும் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர்.

 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் தடயங்களை சேகரித்ததுடன் கார், 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் மாநகர காவல் துறை துணை ஆணையாளர் சீனிவாசன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

நடமாட்டம் உள்ள பகுதியில் மர்ம பொருள் வெடித்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Right Menu Icon