கோவையில் பழிக்குப் பழியாக தொடரும் பதற்றம்… மாகாளியம்மன் கோவில் வாசலில் தீ வைத்த மர்ம நபர்கள் யார்?
கோவையில் பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசப்பட்ட சம்பவம் நடந்த மறுதினமே, பழிக்குப் பழி என்பது போல் கோவையில் நேற்று நள்ளிரவில் டவுன்ஹால் மாகாளியம்மன் கோயில் வாசலில் மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
நள்ளிரவில் நடந்த தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து உக்கடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை டவுன்ஹால் ஐந்து முக்கு பகுதியில் அமைந்துள்ளது அருள் மிகு மாகாளியம்மன் கோயில். இக்கோவில் மீது தீ வைத்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயிலுக்கு தீ வைத்து சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள மர்ம நபர்கள் தப்பிச் சென்றுள்ளான்.

கோயில் வாசலில் தீ எரிந்ததில் அங்கு உள்ள வேல், கட்டிட கூரை உள்ளிட்ட பகுதிகள் தீ புகையால் கருப்பாக காணப்படுகின்றது. நள்ளிரவு அல்லது அதிகாலையில் சம்பவம் நடந்திருக்க கூடும் என்ற நிலையில், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோவை வைத்து மா்ா நபர் யாா்? என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில் நேற்று பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசப்பட்ட சம்பவத்தால் எழுந்துள்ள பதற்றம் அடங்கும் முன் கோயில் முகப்பில் தீ வைக்கப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடததில் உக்கடம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.






