--- --:--:-- --

தமிழகத்தில் திங்கட்கிழமை முதல் பிளாஸ்மா சிகிச்சைக்கென சிறப்பு மையம் அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் திங்கட்கிழமை முதல் பிளாஸ்மா சிகிச்சைக்கென சிறப்பு மையம் அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் மருத்துவர்கள் உள்ளிட்டோருடன் நோய் தடுப்பு முறைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். மேலும் மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளரிடம் பேசுகையில், ‘’தமிழகம் முழுவதும் நோய்த்தொற்று தடுப்பு நடைமுறைகளை அரசு வேகமாக எடுத்து வருகிறது. காய்ச்சல் நோய் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தனிமைப்படுத்தும் முகாம்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

 

தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை 1405 பேர் முழுமையாக நோய்த் தொற்றில் இருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனர்.. 52 கர்ப்பிணிகள் நோய்த் தொற்றில் இருந்து விடுபட்டு தாயும் சேயும் நலமாக உள்ளனர். கர்ப்பிணித் தாய்மார்களை பொருத்தவரை குழந்தை பிறப்பதற்கு பத்து தினங்களுக்கு முன்பே அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பாதிப்பு இருந்தால் முழு அளவில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை 1094 படுக்கைகள் 5 மருத்துவமனைகளில் உள்ளது 240 படுக்கைகளில் ஆக்சிஜன் கொடுக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. வென்டிலேட்டர்கள் அதிக அளவில் தேவைப்படுகிறது நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்தா அலோபதி மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தேவையான மருந்துகள் இருப்பு உள்ளது பிசிஆர் கருவிகள் தமிழகத்தில் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்கள் மத்திய அரசு தரக்கூடிய பிசியா கருவிகளை மட்டுமே வைத்து சோதனை நடத்துகின்றனர்.

 

தமிழகத்தைப் பொருத்தவரை 95% சொந்த நிதியிலிருந்து பிசிஆர் கருவிகள் வரவழைக்கப்பட்டு இந்தியாவிலேயே அதிக அளவில் தமிழகத்தில் சோதனைகள் நடத்தப்படுகிறது. பிளாஸ்மா சிகிச்சையைப் பொறுத்த வரை இந்தியாவில் 44 மையங்கள் உள்ளது. சென்னையில் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 26 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு அதில் 24 பேர் பூரண நலம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். மதுரையில் 4 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.

 

தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் நோய்த் தொற்றில் இருந்து விடுபட்டு பூரண நலம் அடைந்து வீடு திரும்பிவிட்ட நிலையில் அவர்கள் பிளாஸ்மா சிகிச்சை அளிக்க தானம் தர முன்வரவேண்டும் என அரசின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறேன் என்றார்.

 

வரும் திங்கட்கிழமை முதல் பிளாஸ்மா சிகிச்சை தனிப்பிரிவு சென்னையில் செயல்படத் துவங்கும் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது சவாலான நேரம் தரமான மருத்துவத்தோடு பெற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்தையும் முழு அளவில் கொடுக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என்று தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon