பெரியார் தேநீர் விடுதியில் 2 ரூபாய்க்கு டீ..!
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பகுதியில் பெரியார் நகரில் பெரியார் தேநீர் விடுதி அமைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 17ஆம் தேதி பெரியாரின் 45 வது பிறந்த நாள் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
இதனையடுத்து பெரியார் தேநீர் விடுதியில் ஒரு கப் தேனீர் இரண்டு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கடையில் கருப்பு மற்றும் சிகப்பு நிற பலூன்களால் அலங்கரிக்கப்பட்டு பெரியார் பாடல்கள் ஒலிக்கப்பட்டிருந்தன.





