என்கொயரி என்று சொல்லி தான் கூட்டிட்டு வந்தாங்க டிடிஎப்வாசன் பேட்டி..!
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி விபத்தில் சிக்கிய பிரபல யுடியுபர் டிடிஎஃப் வாசனை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பிரபல யுடியூபர் டிடிஎப் சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது விபத்தில் சிக்கினார். இதில் படுகாயம் அடைந்தவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் சென்னையில் உள்ள தனது நண்பர் வீட்டில் பதுங்கி இருந்தார்.
டிடிஎஃப் வாசன் மீது நான்கு பிரிவுகளின் கீழ் காஞ்சிபுரம் பாலு செட்டி சத்திரம் காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ள சூழலில் அவர் கைதாகி உள்ளார். அவரை சென்னையில் இருந்து காஞ்சிபுரம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதன்பின் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். ஏற்கனவே டிடிஎஃப் வாசனையின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய தமிழ்நாடு போக்குவரத்து துறை ஆணையரகம் பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.





