3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்..!
ஜனவரி மாதத்தில் அரசு மதுபான கடைகளை மூன்று நாட்கள் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டாஸ்மாக் நிறுவனம் தெரிவித்திருக்கும் செய்தியில் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் ஜனவரி 15, 18, 26 ஆகிய மூன்று நாட்கள் மூடப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ஜனவரி 15ஆம் நாள் திருவள்ளுவர் நாள், ஜனவரி 18 வடலூர்ராமலிங்க அடிகளார் நினைவு நாள், ஜனவரி 26 குடியரசு நாள் ஆகியவற்றுக்காக நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.





