--- --:--:-- --

100 நாட்களில் தமிழ், ஆங்கிலம், கணிதம்..!

5.1

மிழ் மற்றும் ஆங்கிலம் வாசித்தல் பயிற்சி மற்றும் கணிதப் பாடத்தில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகிய அடிப்படைத் திறன்களை 100 நாட்களில் கற்பித்து, ஓப்பன் சேலஞ்ச் எனப்படும் வெளிப்படையான சவாலைப் பொது வெளியில் அறிவித்து இச்செயலை நடைமுறைப்படுத்த அனைத்து விதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்டக் கல்வி அலுவலர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது எனத் தொடக்கக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

 

அந்தச் சுற்றறிக்கையில், “தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக வழக்கமான கற்றல் கற்பித்தல் பணிகளுடன் எண்ணும் எழுத்தும், திறன்மிகு வகுப்பறைகள், உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் போன்ற திட்டங்கள் மாணவர்களின் வாசிப்புத் திறனையும் கற்றல் திறனையும் மேம்படுத்தி வருகின்றன.

 

தளி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆனேகொள்ளு, ஊராட்சிக்குட்பட்ட டி.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியை க.வளர்மதி என்பவர், சமூக வலைத்தளப் பக்கத்தில் 04.11.2024 அன்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சருக்கு அழைப்பு விடுத்து, அதில் “எங்கள் பள்ளியில் 33 மாணவர்கள் பயின்று வருகின்றார்கள்.

 

அனைவரும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பாடங்களை நன்றாக வாசிக்கத் தெரிந்தவர்கள் மற்றும் கணிதப் பாடத்தில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகிய அடிப்படைத் திறன்களில் அடைவு பெற்றுள்ளனர். அமைச்சர், எங்கள் பள்ளிக்கு வருகை புரிந்து மாணவர்களின் கற்றல் அடைவுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

Right Menu Icon