நான் முதல்வன் திட்டத்தில் 4,500 மாணவர்கள் பயிற்சி..!

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், ஆயிரத்து 171 மாணவர்களுக்கு உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன் ஆகியோர் பட்டங்களை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணுபிரசாத், விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் ராதா கிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

 

பட்டமளிப்பு விழாவில் பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன், “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் இக்கல்லூரியில் 4 ஆயிரத்து 500 மாணவர்கள் திறன் மேம்பாட்டுப் பயிற்சி பெற்றுள்ளனர் என்று தெரிவித்தார்.

 

மேலும், இளநிலைப் பிரிவில் ஆயிரத்து 98 மாணவர்களுக்கும், முதுகலைப் பிரிவில் 73 மாணவர்களுக்கும் என மொத்தம் ஆயிரத்து 171 மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டதாக அவர் கூறினார். தற்போது, இக்கல்லூரியில் தமிழ், ஆங்கிலம், வரலாறு, கணிதம், வணிகவியல், இயற்பியல் உட்பட 13 பாடப்பிரிவுகளில் மொத்தம் 4 ஆயிரத்து 425 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

 

கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியின் வரலாற்றை அமைச்சர் கோவி. செழியன் எடுத்துரைத்தார். இக்கல்லூரி 1966-ம் ஆண்டு முதல்நிலை வகுப்புகளுடன் விருத்தாசலம் ஆண்கள் உயர்நிலைப்பள்ளி கட்டிடத்தில் தொடங்கப்பட்டது. 1969 கொளஞ்சியப்பர் கோயிலின் நன்கொடையுடன் இளங்கலை வரலாறு, இளங்கலை தமிழிலக்கியம் ஆகிய இரண்டு பட்ட வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன.

 

1971-ம் ஆண்டு நிரந்தரக் கட்டிடத்திற்கு மாற்றப்பட்ட இந்தக் கல்லூரிக்கு, பழமலைநாதர் திருக்கோயிலால் 435 ஏக்கர் நிலம் மிகக் குறைந்த விலையில் வழங்கப்பட்டது. 2005-ம் ஆண்டு B+ தரம் பெற்ற இக்கல்லூரி, 23.05.2014 முதல் முதல்நிலை (Grade-I) கல்லூரியாகத் தரம் உயர்த்தப்பட்டது. 2016-17 ஆம் ஆண்டு இக்கல்லூரி தனது பொன்விழா ஆண்டைக் கொண்டாடியது.

 

இக்கல்லூரியில் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர், தமிழ்வழியில் பயிலும் மாணவர்கள் எனப் பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 4,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுகின்றனர். தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் 691 மாணவர்களும், புதுமைப்பெண் திட்டத்தில் 458 மாணவிகளும் உதவித்தொகை பெறுகின்றனர்.

கல்லூரிச் சின்னத்தில் இடம்பெற்றுள்ள அம்சங்களின் தத்துவத்தையும் அமைச்சர் விளக்கினார். மாணவர்கள் கூர்மையான அறிவாற்றல் பெற வேண்டியதை வேல் குறிக்கிறது. உயர்ந்த மனப்பான்மை, தன்னம்பிக்கை மற்றும் மனஉறுதி அடைய வேண்டியதை பழமலைநாதர் கோயில் குறிக்கிறது.

 

மாணவர்கள் “உழைப்பே தெய்வம்” என்று கருதிப் படிப்பில் கவனம் செலுத்தி உழைத்து உயர வேண்டும் என்பதே இச்சின்னத்தின் சாராம் சமாகும் என்று அமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டார்.


4,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு.. பலி 32 ஆக உயர்வு..!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 4,026 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக குஜராத்தில் ஒரே நாளில் 59 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட கேரளாவில் 1,416 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

 

மகாராஷ்டிராவில் 494, குஜராத்தில் 397, டெல்லி, மே.வங்கத்தில் 393 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி உயிரிழந்தோர் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது.


தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று 4,343 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 4,343 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 57 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

தமிழகத்தில் கடந்த மாதத்தில் இருந்து தினந்தோறும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக கடந்த மாதம் 25-ந்தேதியில் இருந்து நாள்தோறும் 3 ஆயிரத்தை தாண்டிய வண்ணம் இருந்தது.

 

இந்நிலையில் இன்று 4 ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இன்று ஒரே நாளில் 4,343 தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று புதிதாக 4,343 பேருக்கு கொரோனா பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 98,392 ஆக உயர்ந்துள்ளது.

 

“அதேவேளையில் சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் 3,095 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் இதுவரை 56,021 பேர் குணமடைந்துள்ளனர்”

 


3,4,5,8 ஆகிய வகுப்புகளுக்கு ஜூன் 15 இல் புத்தகம் வழங்கப்படும்

3,4,5,8 ஆகிய  வகுப்புகளுக்கான பாடப்புத்தகம்  வரும்  15 ஆம்  தேதிக்கு  பிறகே  கிடைக்கும்  என   பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது. 3,4,5,8 ஆகிய வகுப்புகளுக்கான பாடத்திட்டம் அடுத்த ஆண்டு தான் வெளியிடப்படுவதாக இருந்தது. ஆனால் கடந்த ஆண்டின் இறுதியில் தமிழக அரசு தரப்பிடமிருந்து அரசாணை வெளியிடப்பட்டது.

 

அதன்படி இந்த ஆண்டிலேயே 3,4,5,8 ஆகிய வகுப்புகளுக்கானபாடத்திட்டம் புதிதாக இந்த ஆண்டே வெளியிடப்படுகிறது. இந்த ஆண்டிலிருந்தே அனைத்து வகுப்புகளுக்கான பாடத்திட்டமும் புதிதாக  மாற்றப்படுகின்றன என கூறினர். ஆனால் இறுதி நேரத்தில் தான் அரசாணை வெளியிடப்பட்டது என்பதால் புதிய பாடத்திட்டம் தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அது முடிந்து மே மாதத்தில் தான் இறுதி வடிவம் என்பது தமிழ்நாடு பாடநூல் கழகத்திற்கு வழங்கபட்டிருக்கிறது. இதனால் அதை அச்சிடும் பணியில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது.

 

3 ஆம் தேதியே பள்ளி திறக்கப்பட்டிருக்கும் நிலையில் 4 வகுப்புகளுக்கான புத்தகங்கள் கிடைக்கவில்லை என பெற்றோர் தரப்பில் புகார் எழுப்பப்பட்டிருந்தது. 15 ஆம் தேதிக்குள் அனைத்து பள்ளிகளுக்கும் அந்த புத்தகங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு  பாடநூல் கழகம் கூறியுள்ளது. 3 ஆம் வகுப்பு புத்தகங்களை பொருத்தவரையில் 45 சதவீதம் புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளது.

 

4 ஆம் வகுப்பு புத்தகங்கள்  அனைத்தும் ஓரளவு தயார் நிலையில் உள்ளன. 5 ஆம் வகுப்பை பொருத்தவரையில் 75 சதவீதம் புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளன. 8 ஆம் வகுப்பு புத்தகங்கள் 100 சதவீதம் தயார் நிலையில் உள்ளதாகவும், வரும் 15 ஆம் தேதி மானவர்களுக்கு வழங்கப்படும் என்றும் பள்ளிகல்வித்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.