தங்கம் விலை புதிய உச்சம்: ரூ.90,000-ஐ கடந்தது சவரன்

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.90,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.11,300க்கு விற்பனையாகிறது.

 

சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.167க்கு விற்பனை செய்யப்படுகிறது.


தமிழ்நாட்டில் உள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 74,000 ஆக அதிகரிப்பு..!

மிழ்நாட்டில் உள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை 74 ஆயிரமாக அதிகரிக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஒரு வாக்குச் சாவடியில் ஆயிரத்து 200 வாக்காளர்கள் மட்டுமே இருக்க வேண்டிய நிலையில், தமிழ்நாட்டில் உள்ள வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 68 ஆயிரத்திலிருந்து 74 ஆயிரமாக அதிகரிக்கப்படுகிறது.

 

புதிதாக உருவாக்கப்படும் 6 ஆயிரம் வாக்குச்சாவடிகள் குறித்து ஒரு வாரத்திற்குள் அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி, வாக்குச்சாவடிகளை இறுதி செய்ய மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளில் அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்களை பயன்படுத்திக் கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

 

வாக்குச்சாவடி அலுவலர்களாக மத்திய மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஏற்கனவே நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் பணிக்கு வர இயலாத நிலை ஏற்பட்டால் அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்ட பணியாளர்களை பயன்படுத்திக்கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளதாக அர்ச்சனா பட்நாயக் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாடு வாக்குச்சாவடி எண்ணிக்கை 74,000 ஆக உயருகிறது!

மிழ்நாட்டில் தற்போது 68,000 வாக்குச் சாவடிகள் இருக்கும் நிலையில், புதிதாக 6,000 வாக்குச் சாவடிகள் உருவாக்கப்பட்டு 74,000 ஆக உயர்கிறது.

 

1,200 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற அடிப்படையில் பெரிய வாக்குச் சாவடிகள் பிரிக்கப்பட்டது. அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி இறுதி செய்ய மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


விடுமுறை நாளில் வேலை செய்தால் ரூ.1,000..!

முதல்வர் மருந்தகங்கள் முறையாக இயங்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்நிலையில், முதல்வர் மருந்தகங்கள் சிறப்பாக செயல்பட அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாக கூட்டுறவுத் துறை விளக்கம் அளித்துள்ளது.

 

மேலும், விடுமுறை தினங்களில் பணிபுரியும் மருந்தாளுநர்களுக்கு ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ரூ.73,000-ஐ கடந்த தங்க விலை..!

டந்த சில மாதங்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், கடந்த மே மாதத்தில் ஏற்ற இறக்கங்களை சந்தித்தது. இதற்கு முன்னர் கடந்த ஏப்ரல் மாதத்தில் 22 காரட் ஆபரணத் தங்கம் ரூ.74 ஆயிரத்தை கடந்து உச்சத்தை தொட்டது.

 

ஜூன் மாதம் தொடங்கியதிலிருந்தே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.இந்த நிலையில் இன்று தங்கம் விலை மேலும் அதிகரித்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம், கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9130-க்கும், சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.73,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.7490-க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ரூ.54,920-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலையில் மாற்றம் ஏதுமில்லாமல், ஒரு கிராம் வெள்ளி ரூ.114-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,14,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


4,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு.. பலி 32 ஆக உயர்வு..!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 4,026 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக குஜராத்தில் ஒரே நாளில் 59 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட கேரளாவில் 1,416 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

 

மகாராஷ்டிராவில் 494, குஜராத்தில் 397, டெல்லி, மே.வங்கத்தில் 393 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி உயிரிழந்தோர் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது.


தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகளுக்கு ரூ.2,000 அபராதம்..!

டைகள், வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் வைப்பது தொடர்பாக வணிகர் சங்க உறுப்பினர்களுடன் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.  கூட்டத்திற்கு பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில், தமிழகம் முழுவதும் உள்ள கடைகளில் தமிழில் பெயர் பலகைகள் வைப்பதை உறுதிப்படுத்தும் நோக்கில், அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

தமிழில் பெயர் பலகைகள் வைப்பது தொடர்பான உத்திகளை வகுத்தல், தொடர்புடைய துறைகள் மற்றும் பங்குதாரர்களின் ஒத்துழைப்பை பெறுதல் போன்றவை தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.உள்ளாட்சி அமைப்புகளில் தமிழில் பெயர் பலகைகள் வைக்காத கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் விதிகளின் படி ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

 

உணவகங்களில் தமிழில் பெயர் பலகைகள் வைக்கப்படாவிட்டால் தமிழ்நாடு கேட்டரிங் நிறுவனங்கள் சட்டத்தின் அடிப்படையில் ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தொழிலாளர் நலத்துறை ஆணையர் ராமன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சியின் பல்துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


பொங்கலுக்கு ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.1,000..!

பொங்கலுக்கு அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் ரூ. 1,000 வழங்கப்படும் என்று CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் 9 முக்கிய அறிவிப்புகளை ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

 

அப்போது பேசிய அவர், ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பண்டிகை கால முன்பணம் ரூ.4,000-ல் இருந்து ரூ.6,000-ஆக அதிகரிக்கப்படுவதாக தெரிவித்தார்.