சென்னையில் மாற்றுத் திறனாளிகள், திருநங்கையருக்கு நடிகர் சூரி நிவாரணம்!
ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட ஆரம்பத்தில் கொரோனா எங்கிருக்கிறது என தேடிய நாம் தற்போது கொரொனா யாருக்கு இல்லை எனத் தேடும் நிலை ஏற்பட்டுள்ளதாக நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.
சென்னை முகப்பேரில் தனியார் பள்ளி மைதானத்தில் 300 மாற்றுத்திறனாளிகள் மற்றும் 100 திருநங்கையருக்கு தனது சொந்த செலவில் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களின் தொகுப்பை வழங்கிய நடிகர் சூரி பொதுமக்கள் அவசியம் இன்றி வெளியே வருவதை தவிர்த்து தமிழக அரசு மேற்கொள்ளும் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.







