--- --:--:-- --

பூமிக்குத் திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்..!

2

விண்வெளி ஆய்வு மையத்திற்குச் சென்ற இந்திய வம்சாவளி சுனிதா வில்லியம்ஸ் வரும் 19-ஆம் தேதி பூமிக்குத் திரும்புகிறார். அவர் உட்பட தற்போது நான்கு பேர் பூமிக்குத் திரும்ப இருக்கிறார்கள். அமெரிக்காவின் போயிங் நிறுவனம் உருவாக்கிய ஸ்டார்லைனர் விண்கலம், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர் சர்வதேச விண்வெளி நிலையத்தை கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூன் 5-ஆம் தேதி அடைந்தது.

 

ஒன்பது நாள்களுக்குப் பிறகு ஸ்டார்லைனர் மூலமே அவர்கள் இருவரும் பூமிக்குத் திரும்புவதாக இருந்தது. இருந்தாலும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவர்களால் திட்டமிட்டபடி பூமி திரும்ப முடியவில்லை.

 

இதன் காரணமாக, அவர்கள் இருவரும் கடந்த 9 மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்திலேயே சிக்கியிருந்தனர்.இந்நிலையில், தற்போது அவர்கள் பூமிக்குத் திரும்பும் பணி நடைபெற்றுவருகிறது. இதன் நேரலை காட்சிகளை மேலே இருக்கும் லிங்கில் காணலாம்.

Right Menu Icon