திடீரென பாய்ந்த மின்சாரம்.. காப்பாற்ற முயன்றவர்களுக்கு ஏற்பட்ட சோகம்..!
சென்னை நெற்குன்றத்தில் மின்சாரம் தாக்கியதில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். நெற்குன்றம் பகுதியில் சிவகாமி என்பவருக்கு சொந்தமான கட்டுமானப்பணி வீட்டில் நடைபெற்றது. சென்னை ஆழ்வார் பேட்டையை சேர்ந்த கோகுல்ராஜ், திருவண்ணாமலையை சேர்ந்த விக்னேஷ், செஞ்சியை சேர்ந்த ஏழுமலை முருகன் ஆகிய மேலும் பலர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்பொழுது இந்த கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட அருகில் இருந்த மின்கம்பியில் அவரது கை பட்டு விட்டது. இதனால் அவரை மின்சாரம் தாக்கி விட்டது.
இதை பார்த்து அருகில் இருந்த 3 பேரும் அவரை காப்பாற்ற முயன்ற பொழுது அவர்களுக்கு மின்சாரம் தாக்கப்பட்டுள்ளது. அவசர சிகிச்சை ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து தற்போது முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.






