--- --:--:-- --

ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவி..!

9

பெரம்பலூர் மாவட்டம் புது அம்மா பாளையத்தை சேர்ந்த பதினோராம் வகுப்பு மாணவி அரசு பேருந்தில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் பள்ளி மாணவி பேருந்து படிக்கட்டில் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

 

சேலம் அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது பதினோராம் வகுப்பு மாணவி பேருந்தில் இருந்து தவறி விழுந்துள்ளார். படுகாயமடைந்த மாணவிக்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பேருந்து வசதி இல்லாத காரணத்தினாலும் கூட்ட நெரிசல் காரணமாக பள்ளி மாணவிக்கு விபத்து நேரிட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

Right Menu Icon