--- --:--:-- --

பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு திடீர் வாந்தி, வயிற்றுபோக்கு..!

2

பொள்ளாச்சிக்கு அருகே கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 18 மாணவர்களுக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 400 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று மதியம் மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டது. இதில் 18 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம், தலை சுற்றல் ஏற்பட்டது.

 

உடல் உபாதைகள் இருந்ததால் உடனே மாணவர்களை பள்ளி, ஆசிரியர்களும் அங்கிருந்த பொதுமக்களும் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

Right Menu Icon