பப்ஜி விளையாடியதை கண்டித்த பெற்றோர் மாணவர் எடுத்த விபரீத முடிவு..!
சென்னையை அடுத்த பீர்க்கன்கரணையில் பப்ஜி விளையாட்டில் மூழ்கிய கல்லூரி மாணவர் ஒருவர் பெற்றோர் கண்டித்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு 3 மகன்கள் இருந்த நிலையில் இரண்டாவது மகன் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
கடந்த மூன்று வருடங்களாக தொடர்ந்து விளையாடி வந்ததாகவும், கடந்த ஒரு வாரமாக கல்லூரி கூட செல்லாமல் பப்ஜி விளையாட்டில் மூழ்கி இருந்துள்ளார். இதனால் வீட்டில் பெற்றோர் திட்டி உள்ளனர். இந்த நிலையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.






