ஸ்டாலின் முன்னெச்சரிக்கை ஆலோசனை..!
கனமழை பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் மக்களைத் தங்க வைக்க முகாம்களைத் தயார் நிலையில் வைக்கவும், உணவு, குடிநீர், மருத்துவ வசதிகளை உறுதி செய்யவும் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 8 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். டெல்டா மாவட்டங்களில் பெய்யும் கனமழை குறித்து ஆய்வு செய்த முதல்வர், “நெல் கொள்முதல் ஈரப்பதத்தின் அளவை 17%லிருந்து 22% ஆக தளர்த்துவதற்கு மத்திய அரசின் ஒப்புதல் பெற அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார்.





