--- --:--:-- --

மு.க. ஸ்டாலினுக்கு பிரதமராகும் எண்ணம் : இ.பி.எஸ். விமர்சனம்

7

பிரதமராக வேண்டும் என்ற எண்ணத்தில் அரசியல் கட்சி தலைவர்களுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

 

எந்த விதத்தில் சமூகநீதி அளிக்கப்பட்டது என முதலமைச்சர் மு க ஸ்டாலின் தனது கடிதத்தில் விளக்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

 

மேலும் ஆட்சி ரீதியிலான தொடர் தோல்விகளை மறைப்பது சமூக கட்டமைப்பு என்ற பெயரில் அவர் கடிதம் எழுதியுள்ளதாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். பல மாநில கட்சிகளின் தலைவர்களுக்கு பிரதமர் ஆக வேண்டும் என்று எண்ணம் வந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

Right Menu Icon