--- --:--:-- --

இறந்து போன தாயின் சடலத்துடன் 4 நாட்கள் இருந்த மகன்..!

dead body with a blank toe tag, in monochrome

closeup of the feet of a dead body covered with a sheet, with a blank tag tied on the big toe of his left foot, in monochrome, with a vignette added

றந்துபோன தாயின் சடலத்துடன் 4 நாட்கள் வரை மனநலம் பாதிக்கப்பட்ட மகன் சென்னை நீலாங்கரையில் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நீலாங்கரையில் சரஸ்வதி நகரை சேர்ந்தவர் சுரேஷ். 52 வயதான இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டதோடு குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர் எனக் கூறப்படுகிறது.

 

இதனால் இவரின் மனைவி மற்றும் பிள்ளைகள் பிரிந்து சென்று வசித்து வந்ததாக கூறப்படும் நிலையில் தாய் இறந்தது தெரியாமல் வீட்டிலேயே வைத்துள்ளார். துர்நாற்றம் வரவே வீட்டில் இருந்த பிளாஸ்டிக் டிரம்மில் தாயின் உடலை போட்டு வைத்துள்ளார். அக்கம்பக்கத்தினர் சம்பவம் குறித்து கேட்டபோது நடந்த அத்தனையும் தெளிவுபடுத்தியுள்ளார்.

 

உடனே போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சடலத்தை மீட்க வந்தனர். ஆனால் போலீசை உள்ளே நுழைய விடாமல் அவர் தகராறில் ஈடுபட்டார். 6 மணிநேரம் போராடிய போலீசார் சடலத்தை மீட்டு சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon