சமையல் எரிவாயு தட்டுப்பாட்டுக்கு தீர்வு..!
எரிபொருள் தட்டுப்பாட்டைச் சமாளிக்க அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சுமார் 10 லட்சம் டன் சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்ய மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்தியா தனது சமையல் எரிவாயு தேவையில் சுமார் 85 விழுக்காடு அளவை வளைகுடா நாடுகளிடம் இருந்து பெறுகிறது.
வளைகுடா நாடுகளில் நடைபெற்று வரும் போர்ச்சூழநிலையால் தற்போது முடக்கப்பட்டுள்ள ஹோர்முஸ் நீரிணை வழியாகவே இந்த இறக்குமதி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், வளைகுடா நாடுகளில் இருந்து வரவேண்டிய சமையல் எரிவாயு தாமதம் காரணமாக சுமார் 20 லட்சம் டன் எரிவாயு விநியோக இடைவெளி ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இதனை ஈடுகட்டும் விதமாக சுமார் 10 லட்சம் டன் சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்ய இந்தியா முடிவு செய்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட சந்தைகளில் இருந்து 20 சரக்கு கப்பல்கள் மூலம் எரிவாயு இறக்குமதி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த கப்பல்கள் இம்மாத இறுதியில் இந்தியத் துறைமுகங்களை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டிலும் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்மூலம் சமையல் எரிவாயு விநியோகம் சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





