ஜாமினில் வெளியே வந்த சிவசங்கர் பாபா..!
சிவசங்கர் பாபா புழல் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்தார். சென்னை கேளம்பாக்கம் சுசில்ஹரி பள்ளி மாணவிகள் அளித்த பாலியல் புகாரின் பேரில் அதன் உரிமையாளர் சிவசங்கர் பாபா போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
8 வழக்குகள் அடுத்தடுத்து உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்கள் நிபந்தனைகளோடு சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் வழங்கி இருந்தனர். இதனை தொடர்ந்து நேற்று மாலை புழல் சிறையில் இருந்து சிவசங்கர் பாபா ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.






