--- --:--:-- --

ரஜினிக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து!

6

திரைத்துறையில் 50 ஆண்டுகள் பூர்த்தி செய்த ரஜினிகாந்துக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “தலைவா, நான் உங்களைப் பார்த்து வளர்ந்தேன், உங்களைப் பின்பற்றினேன், உங்கள் அடிச்சுவடுகளில் நடந்தேன்.

 

நீங்கள் இருக்கும் அதே துறையில் இருப்பது எனது மிகப்பெரிய அதிர்ஷ்டம். என்னை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி, மேலும் உங்கள் 50 ஆண்டுகால மகத்தான பாரம்பரியத்திற்கு வாழ்த்துக்கள்.

 

கூலி உங்கள் கிரீடத்தில் இன்னொரு வைரமாக இருக்கும். இப்போது, என்றென்றும், அதற்கு அப்பாலும் உன்னை நேசிக்கிறேன். ஒரு மகத்தான வெற்றிக்காக முழு குழுவிற்கும் வாழ்த்துக்கள்.” என்று பதிவிட்டுள்ளார்.

Right Menu Icon