தற்கொலைக்கு முன் பெண் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..!
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் இருந்து ஓட பள்ளி கிராமத்தில் கந்துவட்டி கொடுமையால் சுஜாதா என்ற பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தேடப்பட்டு வந்த கவிதா என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகளிர் குழுக்களை சேர்ந்த பெண்களுக்கு வங்கிகள் மூலம் சுஜாதா கடன் வாங்கி கொடுத்துள்ளார். கடன் வாங்கி சில பெண்கள் ஏமாற்றிவிட்டு தலைமறைவாகவே அந்த கடனை கட்ட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு சுஜாதா, அதற்காக கவிதாவிடம் முப்பதாயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.
வாங்கிய கடனுக்கு மேல் வட்டிக்கட்டியும் கூடுதல் வட்டி கேட்டு கவிதா தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. கவிதா தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் கூறப்படும் நிலையில் மனமுடைந்த சுஜாதா தான் பெற்ற கடனை திரும்ப செலுத்த முடியவில்லை என்றும் மற்றவர்கள் பெற்ற கடனை தன்னை காட்ட வலியுறுத்தி துன்புறுத்துவதாகவும் வீடியோ வெளியிட்டு கடந்த மாதம் 21ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.






