செமஸ்டர் தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படும்..!
ஆன்லைன் மூலம் நடத்தப்படவுள்ள செமஸ்டர் தேர்வுகளில் 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என அமைத்து கண்காணிக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் அடுத்த மாதம் தொடங்க உள்ளது. கொரொனா அச்சுறுத்தல் காரணமாக செமஸ்டர் தேர்வுகள் இணைய வழி மூலமாக நடைபெறும் என ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என தேர்வு எழுதுபவர்கள் கண்காணிக்க படுவார்கள் என்று அண்ணா பல்கலைக்கழகம் கூறியுள்ளது. மேலும் தேர்வு கால அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் கூறியுள்ளது.







