தயார் நிலையில் உள்ள பாதுகாப்பு படையினர் அமித்ஷா..!
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் உள்ள ராணுவத்தினர் எல்லை மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர், மாநில காவல்துறையினர் எப்போதும் தயார் நிலையில் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்தார். ஜம்முவில் பாதுகாப்பு தொடர்பான உயர்மட்ட ஆலோசனை கூட்டம் அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பிறகு பேசியவர் அவையில் ஜனவரி முதல் வாரம் நடத்தப்பட்ட தீவிரமான தாக்குதல் குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து தேசிய புலனாய்வு முகமை, ஜம்மு காவல்துறையினர் கூட்டாக விசாரணை நடத்துவார்கள் எனவும் தெரிவித்தார்.






