ஈரோட்டில் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து..!
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுக்கா அம்மாபேட்டை அருகே நேற்று தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. குருவை ரெட்டியூர் அருகே செயல்பட்டு வரும் தனியார் பள்ளி வாகனம் குழந்தைகளை அழைத்து வர காலையில் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு அம்மாபேட்டை கால்நடை மருத்துவமனை சாலை வழியாகச் சென்றது.
அந்த சாலை மிகவும் குறுகலாக இருந்த காரணத்தாலும் மழை காலம் என்பதாலும் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது திருப்பத்தில் திருப்புகின்ற சமயத்தில் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

குழந்தைகளுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக பள்ளி நிர்வாகிகள் காயம் பட்ட குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உரிய சிகிச்சை அளித்தனர்.





