--- --:--:-- --

ஜூன் மாதமே தனக்கு தானே சிலை வைக்க ஆர்டர் கொடுத்த எஸ்‌பி‌பி..!

11.1

றைந்த பின்னணி பாடகர் எஸ் பி பி தனக்கு சிலை செய்ய ஆந்திராவை சேர்ந்த சிற்பியிடம் ஜூன் மாதம் ஆர்டர் கொடுத்து இருந்தது தற்போது தெரியவந்துள்ளது. பெற்றோருக்கு சிலை செய்வதற்கு ஆர்டர் கொடுத்து இருந்த எஸ் பி பாலசுப்பிரமணியம் அதன் பின்னர் தனது சிலை ஒன்றையும் செய்து தருமாறு சிற்பி ராஜ்குமாரிடம் கூறியுள்ளார்.

 

ஊரடங்கு காரணமாக சிலைக்கு போட்டோ ஷூட் கொடுக்க வர முடியாது எனக் கூறி தனது புகைப்படங்கள் சிலவற்றையும் சிற்பிக்கு அனுப்பி வைத்துள்ளார். தற்போது சிலை செய்து முடிக்கப்பட்டு இறுதி கட்ட பணிகளை செய்துவரும் நிலையில் எஸ்பிபியின் இறுதிப் பயணமே முடிந்துவிட்டது.

 

தனது மரணத்தை முன் கூட்டியே உணர்ந்து சிலைக்கு எஸ்பிபி ஆர்டர் கொடுத்து இருந்தார் என ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon