ஆன்லைன் ரம்மி விளையாடியவர் எடுத்த விபரீத முடிவு..!
புதுக்கோட்டை அருகே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 2 லட்சம் ரூபாய் வரை இழந்ததால் மனம் நொந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அருண் என்பவர் சேலத்திலுள்ள உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் உடற்கல்வி ஆசிரியர் படிப்பு படித்தார். இந்த நிலையில் செல் போனில் ஆன்லைனில் ரம்மி விளையாடியதாக கூறப்படுகிறது. அதற்காக அவர் தன் நண்பர்களிடமும், உறவினர்களிடம் இரண்டு லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கியுள்ளார்.
இந்த நிலையில் நஷ்டம் ஏற்பட்டதால் மனமுடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனை நடத்தி வருகின்றனர்.






