வானில் இருந்து பறந்து வந்து கீழே விழுந்த பாம்பு..!
இரவு நேரத்தில் போக்குவரத்து மிகுந்த சாலையில் மக்கள் சாலையில் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருக்கும் பொழுது திடீரென வானில் நீளமான பாம்பு ஒன்று தென்பட்டதால் அங்கிருந்த மக்கள் ஆச்சரியத்தோடு அதனை வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பார்கள். பாம்பு தரையில் கண்டாலே திக்குமுக்கு தெரியாமல் ஓடிவிடுவோம். அது விஷப் பாம்பாக இருந்தாலும் சரி விஷமற்ற பாம்பாக இருந்தாலும் சரி அப்படியிருக்க பாம்பை நேரில் கண்டால் நமக்கு என்ன மாதிரியான மனநிலை நடக்கும் என்று யோசித்து கூட பார்க்க முடியவில்லை.
ஒரு நீளமான பாம்பு வானத்திலிருந்து சாலையில் விழுகிறது. அதை பார்த்த பொதுமக்கள் அலறிக்கொண்டு ஓட தொடங்கியுள்ளனர். ஆனால் யாருக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த காட்சியை படம்பிடித்து அந்த மக்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.






