ஏடிஎம்மில் நிரப்ப கொண்டு வந்த ரூ.38 லட்சம் கொள்ளை..!
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் நிரப்ப கொண்டு வந்த 38 லட்சம் பணத்தை பாதுகாப்பிற்காக வந்து செக்யூரிட்டியே கொள்ளையடித்து தப்பிய நிலையில் போலீசார் அவரை கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர்.
வேளச்சேரியில் செயல்பட்டு வரும் ஹிட்டாச்சி கேஸ் மேனேஜ்மென்ட் ஊழியர்கள் ஊரப்பாக்கத்தில் உள்ள ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம்மில் பணத்தை நிரப்புவதற்காக வந்துள்ளனர். திறந்து பணத்தை நிரப்புவதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு வந்து பார்த்தபொழுது செக்யூரிட்டி குணசேகரன் ஐந்து பைகளில் இருந்த பணத்துடன் மாயமானது தெரியவந்துள்ளது.
இது குறித்து கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து குட்டி வாக்கத்தில் உள்ள குணசேகரன் வீட்டிற்கு விசாரித்த போலீசார் அவரது மனைவி அளித்த தகவலின் பேரில் தனியார் விடுதியில் தங்கி இருந்த குணசேகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






