--- --:--:-- --

கொரோனா வைரசால் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு விதிக்கப்படும் கட்டுப்பாடு..!

6

புதிய வகை கொரோனா பரவலால் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா உட்பட 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் என்ற JN 1 புதிய வகை கொரோனா வேகமாக பரவி வருகிறது.

 

இந்நிலையில் இந்த வகை வைரஸ் பரவலுக்கு மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளமாறு மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்குரிய புதிய வகை கொரோனா வைரஸ் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

ஆங்கில புத்தாண்டு அன்று பொது இடங்களில் மக்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் அதன் மூலம் கொரோனா அதிகரிக்கும் என்பதால் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon