நோயாளிக்கு சிகிச்சை அளிக்க மறுப்பு.. 12 மணிக்கு மேல் ஊசி போட முடியாது..!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மறுத்ததாக கூறப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளது. சாத்தூர் வேப்பமலையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் ஆசாத் என்பவரை கடந்த வாரம் நாய் கடித்துள்ளது.
இதனால் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்று ஏற்கனவே இரண்டு முறை நாய் கடி தடுப்பூசி செலுத்தியுள்ளார். இந்நிலையில் மூன்றாவது ஊசி செலுத்த மருத்துவமனைக்கு சென்ற பொழுது அங்கிருந்த மருத்துவர்கள் செவிலியர்கள் ஊசி போட மறுத்துள்ளனர். இது குறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





