--- --:--:-- --

ஜூன் 7 முதல் 9-வரை ரேஷன் கடைகள் திறக்கப்படாது..!

4

ல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் மாதம் 7 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை மாநிலம் தழுவிய தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக ரேஷன் கடை பணியாளர் சங்கம் அறிவித்துள்ளது.

 

தென்காசியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியம் பொது விநியோகத் திட்டத்திற்கான தனித்துறை உருவாக்கப்படவேண்டும், ஓய்வுபெற்ற நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் மாதம் 7ஆம் நாள் முதல் 9ஆம் நாள் வரை மாநிலம் தழுவிய தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.

 

அதை தொடர்ந்து ஜூன் 10-ஆம் நாள் கோரிக்கைகளை வலியுறுத்தி 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களை திரட்டி முதலமைச்சரை சந்திக்க காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார்.

 

Right Menu Icon