பிளாஸ்டிக் பைகளுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் எதிர்ப்பு..!
ரேஷன் கடைகளில் மாதம் 2.20 கோடி கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகிறது. இப்பொருட்கள் 50கி சாக்கு பைகளில் அனுப்பப்படுகிறது. இந்த பைகளை ₹20 வரை கூட்டுறவு சங்கங்கள் விற்கின்றன.
இது அவர்களுக்கு வாடகை உள்ளிட்ட செலவுகளை சமாளிக்க உதவியது. ஆனால், தற்போது பிளாஸ்டிக் பை மூலம் அனைத்து கடைகளுக்கும் பொருட்கள் அனுப்பப்படுகிறது. இது ஒரு பை ₹3 மட்டுமே விலை போவதால் கடை ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.






