இராமநாதபுரம் மாவட்ட தமிழ் புலிகள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பரமக்குடியில் நடந்தது
மாவட்ட பொறுப்பாளர் மு. தமிழ் முருகன் தலைமை தாங்கினார். பொதுச்செயலர் சி.பேரறிவாளன் சிறப்புரையாற்றினார். தலைமை நிலைய செயலர் ஆ.சிறுத்தை செல்வன், மாநில துணை நிதி செயலர் சு.அதிவீரன், தென் மண்டல துணை செயலர் சி.சிவக்குமார் ஆகியோர் பேசினர்.
கோவை மாவட்டம் மேட்டுபாளையம் அருகே நடூரில் தீண்டாமை சுவர் கடந்தாண்டு டிசம்பர் 2ல் இடிந்து 17 குழந்தைகள் பலியான சம்பவத்தில் நீதி கேட்டு போராடிய நாகை திருவள்ளுவன் மீது தாக்குதல், டில்லி நேரு பல்கலை., மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய போலீசாரை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குடியுரிமை சட்டம், 5, 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை உடனே ரத்து செய்ய வேண்டும். பெரியாரை அவதூறு பேசிய நடிகர் ரஜினியை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பிப்.9ல் கோவையில் நடைபெறவுள்ள நீலச்சட்டை மற்றும் சாதி ஒழிப்பு மாநாட்டில் ஏராளமானோர் பங்கேற்பதென தீர்மானம் நிறைவேறியது.






