பொங்கலுக்கு தரமான பரிசு – எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி
சேலம் மாவட்டம் வலசையூரில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பல லட்சம் மதிப்பில் ஏழைகளுக்கு வீடு கட்டி தரப்படும்.
திருமண உதவி திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும். ஒவ்வொரு தீபாவளிக்கும் தாய்மார்கள், சகோதரிகளுக்கு சேலை வழங்கப்படும். பொங்கல் பண்டிகைக்கு தரமான பரிசு வழங்கப்படும் என்றார்.






