தனியார் மதுபான கடைகளும் இன்று இயங்காது!
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள், அதனுடன் தொடர்புடைய பார்களை தொடர்ந்து தனியார் மதுபான கடைகளும், பார்களும் இன்று (மே 1) இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. நட்சத்திர விடுதிகளிலும் மது விற்பனை நடக்காது.
இதனை மீறி மதுபானம் விற்பனை செய்யும் டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் அரசு எச்சரித்துள்ளது.






