--- --:--:-- --

பிரதமரின் மின்னணு மருத்துவ திட்டம் இன்று தொடக்கம்..!

1

நாட்டு மக்கள் அனைவருக்கும் அவரவர் மருத்துவ தகவல்கள் அடங்கிய பிரத்யேக அடையாள எண் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். பின்னர் மருத்துவத் திட்டம் நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்படும் என கடந்த ஆண்டு சுதந்திர தின உரையில் பிரதமர் தெரிவித்திருந்தார்.

 

தற்போது சோதனை முயற்சியாக ஆறு யூனியன் பிரதேசங்களில் மின்னணு மருத்துவத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இனி நாடு முழுக்க விரிவாக்கப்பட உள்ளது. இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார் மோடி.

 

இன்றைய தினம் இந்திய மருத்துவத் துறையில் புதிய அத்தியாயம் தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். நவீன மின்னணு தொழில் நுட்பங்கள் வாயிலாக மருத்துவ சேவைகளை மக்கள் எளிதாக பெற வழி வகுப்பதே மின்னணு மருத்துவத் திட்டம் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

 

மருத்துவ அடையாள அட்டைத் திட்டத்தின் கீழ் தனிநபரின் மருத்துவ வரலாற்றில் இரகசியத்தன்மை பாதுகாப்புடன் மருத்துவ சேவைக்கான கட்டமைப்பு வசதிகள் தகவல்களை பெறமுடியும் என கூறப்பட்டுள்ளது.

 

இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொருவருக்கும் பிரத்யேக அடையாள எண் வழங்கப்படுவதுடன் செல்போன் செயலி மூலம் மருத்துவ சேவைகளை எளிதாக பெற வழி ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon