அயோத்தி ராமர் கோயிலில் வைக்க ராட்சதமணி தயாரிப்பு..!
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்காக ராட்சதமணி தயாரிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே மிகப்பெரிய மணியாக கருதப்படும் இந்த ராட்சத மணியின் எடை மட்டும் 2.400 கிலோ. கோயில் மணிகளை தயாரிப்பதற்கு பெயர் பெற்ற உத்தர பிரதேச மாநிலம் எட்டா மாவட்டத்தில் தான் இந்த மணி உருவாக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள 30 ஊழியர்கள் சேர்ந்து இதனை வடிவமைத்திருக்கிறார்கள். தங்கம், வெள்ளி, செம்பு, ஜிங்க், இரும்பு பாதரசம் உள்ளிட்ட எட்டு உலோகங்களை கொண்டு ராட்சதமணி தயாரிக்கப்பட்டுள்ளது.
ராமர் கோயிலுக்காக ராட்சதமணிக்கு 25 லட்சம் ரூபாய் செலவு செய்து இருக்கிறார் தொழிலதிபர் ஆதித்யமிட்டல். மறைந்துபோன தனது சகோதரியின் விருப்பத்தின்படி ராமர் கோயிலுக்கு ராட்சத மணி அளிப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
ஆறடி உயரம், 5 அடி அகலம் கொண்ட இந்த மணியை அடித்தால் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு சப்தம் கேட்கும் என கூறப்படுகிறது.






