--- --:--:-- --

சூனியம் வைக்க வந்தவர் என நினைத்து இளைஞர் மீது பெட்ரோல் ஊற்றி எரிப்பு..!

6

புதுச்சேரியில் சூனியம் வைக்க வந்தவர் என்ற சந்தேகத்தில் இளைஞர் ஒருவர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மற்றும் கூட்டாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

திருச்சி பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் புதுச்சேரிக்கு வேலை தேடி வந்துள்ளார். இரவு தூங்குவதற்காக இடம் தேடி அலைந்தபோது மேட்டுப்பாளையம் பெட்ரோல் நிலையம் உள்ளே செல்ல முயற்சித்துள்ளார்.

 

அப்போது அவரை சூனியம் வைப்பவர் என நினைத்த பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் ஊழியர்களும் யார் என கேட்டு விசாரித்துள்ளனர் விரட்டுவதற்காக சதீஷ்குமார் மீது பெட்ரோல் ஊற்றி தீபெட்டியை பற்றியுள்ளனர்.

 

எதிர்பாராதவிதமாக சதீஷ்குமாரின் உடலில் தீப்பற்றியதால் அவர்களே அதை அணைத்துள்ளனர். தானாக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு சென்ற சதீஷ்குமார் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

 

அதனால் அளித்த புகாரின் பேரில் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 4 பேரை கைது செய்து 3 பேரை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon