--- --:--:-- --

தமிழகத்தில் கட்டுப்பாடுகள் தொடர்பாக இன்று ஆலோசனைக் கூட்டம்..!

1

கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் தமிழகத்தில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த தொடர்பாக இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. கொரொனா தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழகத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை எட்டாயிரத்தை நெருங்கி வருகிறது.

 

இதனால் ஏற்கனவே சில கட்டுப்பாடுகளை விதித்து இருக்கும் தமிழக அரசு கொரொனா பரவலை தடுக்கும் நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. இந்த நிலையில் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உடன் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார்.

 

தமிழகத்தில் மேலும் சில கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே பிளஸ் டூ தேர்வு தள்ளி வைப்பது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

 

தலைமை செயலர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

 

சிபிஎஸ்சி பிளஸ் டூ தேர்வு தள்ளி வைக்கப்பட்ட நிலையில் தமிழகத்திலும் பிளஸ் 2 தேர்வை தள்ளி வைக்கலாமா என கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. தமிழகத்தில் மே 5ம் தேதி பிளஸ் டூ தேர்வு தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon