--- --:--:-- --

அரிசிக் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் ரொக்கப் பரிசு..!

1

மிழர் திருநாளான பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டாடிட தமிழ்நாடு அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்புத் தொகுப்பையும், ரொக்கமும் வருடாவருடம் அளித்துவருகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 2,22,91,710 அரிசிக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுநீளக் கரும்பு வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு ரூ.248.66 கோடி நிதியும் ஒதுக்கியது.

 

இதனைத் தொடர்ந்து, பொங்கல் திருநாளை தமிழ்நாடு மக்கள் சிறப்பாகக் கொண்டாடிட அரிசிக் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து ரொக்கத் தொகை ரூ. 3,000/- வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டார்.இதற்காக தற்போது ரூ. 6,687 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Right Menu Icon