--- --:--:-- --

கஞ்சா விற்ற கைதிக்கு போலீசார் ஆசிட் ஊற்றி சித்ரவதை

16

நீலகிரி மாவட்டத்தில் கஞ்சா வழக்கில் கைதானவரின் உடலில் காவல்துறையினர் ஆசிட் ஊற்றி துன்புறுத்தியதாக சிறையிலிருந்து பிணையில் வெளிவந்த அவர் புகார் தெரிவித்துள்ளார். பந்தலூர் பகுதியை சேர்ந்த சிவராஜ் என்பவர் திருப்பூர் பகுதியில் விசைத்தறி தொழில் செய்து வருகிறார்.

 

கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி கஞ்சா விற்பனை வழக்கில் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். கோவை மத்திய சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த சிவராஜ் போலீசார் தன்னை நிர்வாணப்படுத்தி கடுமையாக தாக்கியதாக கூறியுள்ளார். அத்துடன் உடலில் ஆசிட் ஊற்றி துன்புறுத்தியதாகவும் புகார் தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon