80 அடி விவசாய கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான்..!
விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் 80 அடி விவசாய கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமானை சுமார் 2 மணி நேரம் போராடி தீயணைப்பு துறையினர் மீட்டுள்ளனர். பூமிநாதர் கோவில் அருகே உள்ள விவசாய கிணற்றில் புள்ளிமான் தவறி விழுந்துள்ளது.
இதை கண்ட பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து அங்கு வந்த திருச்சுழி தீயணைப்பு துறையினர் கிணற்றுக்குள் விழுந்த ஆண் புள்ளிமானை சுமார் 2 மணி நேரம் போராடி கயிறு கட்டி மீட்டனர்.
உயிருடன் மீட்ட மானை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் கொண்டுபோய் விட்டனர்.






