அண்ணா பிறந்த நாள் விழாவில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் உறுதிமொழி!
அண்ணாவின் 117-ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னையில் அவரது திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின் 117-ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதேபோல, அண்ணா படத்திற்கு துணை முதலமைச்சர் உதயநிதி, அமைச்சர்கள், எம்.பி.,-க்கள் உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செய்தனர். அதன்பின்னர் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என்ற தலைப்பில் முதலமைச்சர் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. நியாயமற்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராக போராடுவேன், வாக்குரிமையை பறிக்கும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பட்டியலுக்கு எதிராக நிற்பேன் என்று திமுகவினர் உறுதிமொழி ஏற்றனர்.
அதைத் தொடர்ந்து வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அண்ணா திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய முதலமைச்சர், அண்ணா சாலையில் அண்ணா சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கும் மரியாதை செலுத்தினார்.
திராவிட முன்னேற்றக் கழகம் எனும் நம் உயிரைத் தாயென அளித்திட்ட திருமகன், பேரறிஞர் அண்ணா. தலைமகன் நிமிர்த்திய தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்” என பதிவிட்டிருந்தார்.






