எட்டு வழி சாலைக்கு அனுமதி அளித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மனு..!
எட்டு வழி சாலைக்கு அனுமதி அளித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சேலம் எட்டு வழி சாலை திட்டத்தை அனுமதித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி சேலம் அயோத்தியா பட்டினத்தை சேர்ந்த யுவராஜ் என்பவர் மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
இதில் ஏற்கனவே சென்னை சேலத்திற்கு மூன்று நெடுஞ்சாலைகள் உள்ள நிலையில் அவற்றில் ஒன்றை விரிவாக்கம் செய்தால் போதுமானது என குறிப்பிட்டுள்ளார். எனவே புதிதாக விலை கொடுத்து நிலங்களை கையகப்படுத்த தேவையில்லை என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தற்போதைய புதிய திட்டங்களில் உருவாகும் சாலையில் 33 சதவீதம் அளவிற்கு கூடுதல் சுங்க கட்டணம் வசூலிக்கப்படும் என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக விவசாய நிலம் விளை நிலங்களை கையகப்படுத்துவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்றும் எனவே இந்த திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கூறியிருக்கிறார்.
முன்னதாக சேலம் எட்டு வழி சாலைக்கு உச்ச நீதிமன்றம் கடந்த டிசம்பர் மாதம் 8ஆம் தேதி அனுமதி வழங்கி தீர்ப்பளித்திருந்தது.






